மனித உரிமை மீறல்: இலங்கை மீது அய்.நா. கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

மனித உரிமை மீறல்: இலங்கை மீது அய்.நா. கண்டனம்

கொழும்பு, செப். 8- இலங்கை நெருக்கடிக்கு அடிப்ப டைக் காரணம் என்ன என்பது குறித்து அய்.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெறாமல் இலங்கை தப்பியதுதான் பொருளாதார நெருக்க டிக்கு அடிப்படைக் காரணம் என்று அய்.நா. மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார். 

இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி குறித்து அய்.நா. மனித உரிமை ஆணையர் மிச் செல் பச்லெட் ஒரு அறிக்கை தயாரித்துள் ளார். அய்.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-ஆவது கூட்டத்தொடர், ஜெனீவாவில் 12-ஆம் தேதி தொடங்கும் நிலை யில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப் பதாவது:- கடந்த கால, நிகழ்கால மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை யில் இருந்து இலங்கை தப்பிய செயல், பொருளா தார குற்றங்கள், ஊழல் ஆகியவைதான் இலங்கை யின் தற்போதைய பொரு ளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணங்கள். இந்த சவால்களை சமா ளிக்க அடிப்படை மாற் றங்களை மேற்கொள்ள வேண்டும். கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான அரசு, கடுமை யான பாதுகாப்பு சட்டங் களை சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அமை தியான போராட்டங்களை ஒடுக் கக்கூடாது. ராணுவமய மாக்கல் நடவடிக்கையை கைவிட வேண்டும். தண் டனையில் இருந்து தப்பு வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாது காப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை பொரு ளாதார நெருக்கடியுடன் அய்.நா. முடிச்சு போடு வது இதுவே முதல் முறை ஆகும். 

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர் கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதற்கு இலங்கையை பொறுப் பேற்க வலியுறுத்தி கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அய்.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே வருகிற 12ஆம் தேதி தொடங்கும் அய்.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொட ரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிநாட்டு அமைப்பு கள் விசாரணை நடத்துவதற் கான ஒரு வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. 

No comments:

Post a Comment