சென்னை,செப்.8- தமிழ்நாட் டுக்கான மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப் படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச் சியில் பங்கேற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் அதிக அளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப் பதற்கு, திராவிட மாடல் ஆட்சி தான் காரணம். தமிழ்நாட்டில் தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர் களும் தங்கள் துறை சார்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண் டியது அவசியமாகும். அதேபோல, மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்க, ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். புதுமைப் பெண் திட்டம், 7.5% இடஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப் பட்டுள்ளன. இதுதவிர, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க் கிறது. ஏனெனில், அவற்றில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் உள்ளன. தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தினால், இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும். தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வ மான எதிர்ப்பு பதிவுசெய்ப்பட் டுள்ளது.
மருத்துவர்கள் தனியே தொழில் தொடங்குவதுபோல, பொறி யாளர் உள்ளிட்டோரும் தொழில் முனைவோராக மாற வேண்டும். மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும். தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வ மான எதிர்ப்பு பதிவுசெய்யப்பட் டுள்ளது. இவ்வாறு கூறினார்.

No comments:
Post a Comment