தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை இலங்கையிலிருந்து மீட்க ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை இலங்கையிலிருந்து மீட்க ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, செப்.8 இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர் களது படகுகளை மீட்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச் சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய-இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கிறது. 

மேலும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இலங்கையில் வைக்கப்பட்டுள்ளதாக வும், அவற்றை மீட்டுத் தந்து, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண் டுமென்றும் தமிழ்நாடு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி தமிழ்நாடு மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஒன்றிய அரசிடம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.9.2022) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 9 மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்ட 150 தமிழ்நாடு மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடு விக்க உதவியமைக்காக, எனது நன் றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த செப். 6-ஆம் தேதி புதுச் சேரியைச் சேர்ந்த மீனவரின் விசைப் படகில் சென்ற மயிலாடுதுறை மாவட் டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள் ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்கள் உள்ளனர். மேலும், 95 மீன்பிடிப் படகுகளும் உள் ளன. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை யும், அவர்களது படகுகளையும் விரை வில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், வெளியுறவுத் துறையும் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment