மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி

சென்னை,செப்.8- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் சாராஸ் மேளாவை தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அமுதப் பெருவிழா சிறப்பு மலரையும் வெளி யிட்டார். நிகழ்வில் அவர் பேசியதாவது: கிராமம் முதல் நகரம் வரை சீரான வளர்ச்சி பெறவே கடந்த 1989-ஆம் ஆண்டு மறைந்த மேனாள் முதலமைச்சர் கலை ஞரால் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் திட்டம் தொடங் கப்பட்டது. தற்போது 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

முதலமைச்சரிடம் பாராட்டு

அவர்களுக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியிருந்தார். அதையும் தாண்டி ரூ.21,360 கோடி கடன் வாங்கிக் கொடுத்து முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றோம். இந்த ஆண்டும் ரூ.25 ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த இலக்கையும் தாண்டி அதிக கடன் பெற்றுக் கொடுப்போம். இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். 

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 'சாராஸ் மேளா' எனப்படும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி சென்னை, கலைவாணர் அரங்கு வளாகத்தில் செப்.18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு அமைக்கப்பட்ட 107 அரங்குகளில் தமிழ்நாடு பல மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புற கைவினைஞர்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.


No comments:

Post a Comment