ராகுல் நடைப்பயணம் சோனியா உருக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

ராகுல் நடைப்பயணம் சோனியா உருக்கம்!

கன்னியாகுமர், செப். 8- ராகுல் காந்தியின் 'இந்திய ஒற் றுமை நடைப்பயணத்திற்கு' காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'ஒற்றுமைக்கான பயணம் ' என்ற நடைப்பயணத்தைக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி உள் ளார். நாடு முழுவதும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிமீ தூரத்திற்கு பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்த நடைப்பயணத் தில் காங்கிரஸ் தலைவர் நேரில் பங்கேற்க முடியாத தற்கு வருத்தம் தெரிவித் தும், ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு வாழ்த்து கூறியும் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை அனுப் பியுள்ளார். அதனை கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பொதுக்கூட்ட மேடையிலேயே தமிழில் மொழி பெயர்த்து வாசித்தார். அந்த வாழ்த்துச் செய்தி யில் சோனியா காந்தி, அனைவருக்கும் வணக் கம். நான் தற்போது மேற் கொண்டு வரும் மருத்து வப் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை களை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தொடங்க இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்திய ஒற்றுமை பயண தொடக்க விழாவில் உங்கள் அனைவருடனும், நேரில் கலந்து கொள்ள இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்

இந்த பயணம் மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியத் தைக் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் எனும் மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தின் வர லாற்று சிறப்புமிக்க நிகழ் வாகும். நமது இயக்கம் இந்நிகழ்விற்கு பிறகு மிகுந்த புத்துணர்ச்சி பெறும் என்று நான் நம்பு கிறேன். இந்திய அரசிய லில் இது ஒரு மகத்தான மாற்றத்தை நிகழ்த்தவல்ல ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க தருணம்.

சுமார் 3600 கிமீ தொலைவிற்கு நிகழ உள்ள இந்த பாதை யாத் திரையில் முழுமையாக கலந்து கொண்டு நிறைவு செய்யப் போகும் நம் கட்சியின் 120 சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த் துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவை தவிர பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக் கள் பயணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வுகளை தவறாமல் நேரலையில் பார்த்த வண் ணம் இந்திய ஒற்றுமை பயணத்தில் உற்சாகத்துட னும், உணர்வுப் பூர்வமா கவும் பங்கேற்பேன். ஆகவே  நாம் அனைவரும் நமது தீர்மானத்தில் ஒற்றுமை யாகவும், உறுதியாகவும், ஒருங்கிணைப்புடனும் முன்னேறி செல்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment