கீனா தேநீர் நிலையம் - தஞ்சையில் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

கீனா தேநீர் நிலையம் - தஞ்சையில் திறப்பு

அண்டர்காடு, செப். 27- நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் அண்டர் காடு சுயமரியாதைச் சுடரொளி அண்டர்காடு கிருஷ்ணன்- - வேதநாயகி ஆகியோரின் இளைய மகன் கி.சுர்ஜித் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அழகம்மாள் நகரில் 25-.9.-2022 அன்று காலை கீனா தேநீர் நிலை யம் திறப்பு விழா நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் மு.அய்யனார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கலைத்துறை செயலாளர் ச.சித் தார்த்தன், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், 

தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம்,  51 வட்ட , தி.மு.க மாவட்ட பிரதிநிதி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்

தோழர் சுர்ஜித் - பேரா.இந்துமதி இணையர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment