தென்காசியில் பெரியார், அண்ணா பேச்சுப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

தென்காசியில் பெரியார், அண்ணா பேச்சுப் போட்டி

தென்காசி,செப்.8- தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது

 தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தென்காசி மாவட்ட அளவில் அண்ணா, பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி தென் காசி இ.சி.இ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. 

வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டி: பள்ளிகளுக்கு:- தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவருக்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப் புகளில் நடக்கிறது. 

கல்லூரிகளுக்கு:- அண்ணாவும், தமிழ்நாடு மறுமலர்ச்சியும், அண் ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல் என்ற தலைப்புகளிலும் நடைபெறு கிறது.

இதேபோன்று வருகிற 17-ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டி: பள்ளிகளுக்கு:- தொண்டு செய்து பழுத்த பழம், பெரியாரும் தமிழ் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவு சிந் தனைகள், பெரியார் காண விரும் பிய உலக சமுதாயம், பெரியாரும் பெண் விடுதலையும், என்ற தலைப்புகளிலும் நடக்கிறது. 

கல்லூரிகளுக்கு:- தந்தை பெரி யாரும் பெண் விடுதலையும், பெரி யாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனி வரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலக சிந்தனை யாளர்களும் பெரியாரும் என்ற தலைப்புகளிலும் நடைபெறுகிறது. 

பரிசு கல்லூரி பேச்சு போட்டி யில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்படும். போட் டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாள் அன்று நேரில் அளிக்க வேண்டும். இதேபோன்று பள்ளி களுக்கு நடைபெறும் போட்டி யிலும் ரொக்கப்பரிசும் சான்றிதழ் களும் வழங்கப்படுகிறது. மேலும் போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவ- மாணவி களுக்கு சிறப்பு பரிசு ரூ.2,000 வீதம் இரண்டு மாணவர்களுக்கு வழங் கப்படுகிறது. பரிந்துரை கடிதம் பள்ளி மாணவ-மாணவிகள் அந் தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாள் அன்று நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல் பட்டு வரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலு வலகத்தில் நேரிலோ அல்லது 0462- 2502521 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment