சென்னை, செப்.13 - புத்தாக்கமான தொழில் நுட்பத்தில் மின் மற்றும் மின்னணு சாதனங்களை 60 ஆண்டுகளாக தயாரித்து வழங்கி வரும் வீனஸ் நிறுவனம் மிக அதிக அளவிலான வாட்டர் ஹீட்டர்களை சுமார் 22க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்தியா முழுவதும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தும், 20,000 விற்பனையாளர்கள் மூலம் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தி வருகிறது. மேலும் 24 மணி நேரம் செயல்படும் 250 சேவை மய்யங்களையும், மிகச் சிறப்பான செயலாற்றும் 600 ஊழியர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
தூத்துக்குடியில் உற்பத்தி ஆலையையும், இந்தியா முழுவதும் மண்டல விற்பனை அலுவலகங்களையும், அதி நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவையும் கொண்டுள்ள நிலையில் தற்போது துருப்பிடிக்காத மற்றும் கடின நீரை தாக்குப் பிடிக்கும் திறன் கொண்ட 4 புதிதாக இன்ஸ்டன்ட் அண்ட் ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment