சென்னை ஒய்.எம்.சி..ஏ.இல் வள்ளலார்-200 விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

சென்னை ஒய்.எம்.சி..ஏ.இல் வள்ளலார்-200 விழா!

சென்னை, அக். 23-  சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன் றத்தில் வள்ளலார்-200 விழாவும், இராமலிங்க அடிகள் பிள்ளைததமிழ் நூல் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

விவேகானந்தா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ம.இளங்கோவன் தலைமை தாங்கினார். பட்டிமன்றச் செயலாளர் முனைவர் ப.தாமரைக் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர். மு. பாலமுரு கன் சிறப்புரை நிகழ்த் தினார். ஏற்புரை நூல் பதிப்பாசிரியர் இரா. மோகனசுந்தரம் வழங் கினார். 

பட்டிமன்றத் தலைவ ரும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனை வர். அவ்வை. நடராசனின் வாழ்த்துச் செய்தி விழா வில் வாசிக்கப்பட்டது. புலவர் பு.சீ.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார். வள்ளலாரின் ‘ஜீவகா ருண்ய விளக்கம்’ என்ற நூல் வருகை தந்தோருக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment