திருவள்ளூர், அக். 23- திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் கோ.கிருட்டினமூர்த்தி தலைமையில் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச்செயலாளர்கள் ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். கவிஞர் பொதட்டூர் புவியரசன், மாவட்டச்செயலாளர் நா.இரமேசு, பொதுக்குழு உறுப்பினர் க.ஏ.மோகன வேலு மாவட்ட இளைஞரணி தலைவர் க.ஏ.தமிழ் முரசு, மணி ஆகியோர் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை செயலாக்குவோம் என உறுதி கூறினார்கள்.
பெரியார்பெருந்தொண்டர் பொதட்டூர் பேட்டை கணேசன் தனது சார்பில் தமிழர் தலை வருக்கு 90ஆவது பிறந்தநாள்பரிசாக விடுதலை வாழ்நாள் சந்தா வழங்கிமகிழ்ந்தார்.
கூட்டத்தில் பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள்விழா, ஆர்.எஸ்.எஸ்.எனும் டிரோஜன் குதிரை நூல் அறிமுகவிழா கூட்டங்கள் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

No comments:
Post a Comment