பன்னாட்டு சமூக நீதிக்கான மாநாட்டில் பங்கேற்ற ம.சுப்பராயனுக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

பன்னாட்டு சமூக நீதிக்கான மாநாட்டில் பங்கேற்ற ம.சுப்பராயனுக்கு பாராட்டு

சங்கராபுரம், அக். 23- 15.10.2022 அன்று மாலை 5 மணிக்கு சங்கராபுரம் சுப்பராயன் ஆசிரியர் இல்ல கூட்டரங்கில் கனடா-டொரொண்டோ சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்ட, கல்லக்குறிச்சி மாவட்ட திரா விட கழகத் தலைவர் ம. சுப்ப ராயன் அவர்கட்கு சங்கைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சங்கைத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் ஆ. இலட் சுமிபதி தலைமை வகித்தார். சங்க செயலாளர் ச. சாதிக்பாட்சா வரவேற்புரையாற்றினார்.

கல்லைத்தமிழ்ச் சங்கத் தலைவர் செ.வ.புகழேந்தி நில அளவை ஆய்வாளர் ஓய்வு 

நா. சின்னசாமி, புதுவை பாவலர் சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனடா - டொரொண்டோ சமூகநீதி மாநாட்டில் கலந்து கொண்ட, கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் 

ம. சுப்பராயனை, கல்லக்குறிச்சி பகுத்தறிவு மன்றத் தலைவர் புலவர் பெ. சயராமன், கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ. மதிவாணன், கல்லக்குறிச்சி ரோட்டரி இல. அம்பேத்கர், சங்கராபுரம் ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் அரிமா விஜயகுமார் சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் 

பெ. பாலசண்முகம், சங்கராபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் 

கே.மதியழகன், தலைமையாசிரி யர் பா.கு. செயராமன் உள்ளிட்ட பலர் பயனாடை அணிவித்துப் பாராட்டிப் பேசினார்கள்.

இறுதியில் ரிசிவந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் 

ஆர். சண்முகம் நன்றி கூறினார்.

இவ்விழாவில் மாவட்ட இணைஞரணித் தலைவர் 

அ. கரிகாலன் மூரார்பாளையம் கிளைக்கழகத் தலைவர் இரா. செல்வமணி தலைமையாசிரியர் ஓய்வு சா.சண்முகம், ஆசிரியர் ஓய்வு சி.இளையாப்பிள்ளை அரிமா அய்.ஜுல்பிகார் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். விழா முடிவில் அனை வருக்கும் அன்புமணி சுப்பரா யன் சிற்றுண்டி வழங்கினார்.

No comments:

Post a Comment