தமிழ்நாட்டில் கரோனா 214 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தமிழ்நாட்டில் கரோனா 214

சென்னை, அக்.23 தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 120, பெண்கள் 94 என மொத்தம் 214 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 53 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 90,452 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 49,008 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (22.10.2022) மட்டும் 402 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 3,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 222 ஆகவும், சென்னையில் 55 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ...

இந்தியாவில் புதிதாக  3,102 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.53 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 2,112 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண் ணிக்கை 4,46,40,748 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ள வர்கள் எண்ணிக்கை 24,043- ஆக உள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,87,748- ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,957ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று (22.10.2022) மட்டும் 2,90,752 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது


No comments:

Post a Comment