உயர் ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு செல்லும் என அறிவிக்கக்கோரிய ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

உயர் ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு செல்லும் என அறிவிக்கக்கோரிய ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடில்லி,அக்.23- பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் செல்லும் என அறிவிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த உலக பிராமணர் நல அமைப்பின் தலைவர் கே.சிவநாராயணன் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நீதிபதிகள் யு.யு.லலித், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், பொருளாதாரத் தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பின ருக்கான இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் செல்லும் என கோரும் மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பவேண்டும் என வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், ரிட் மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment