தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிருவாகக் குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிருவாகக் குழு

சென்னை, அக்.23 தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவினை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுடன், சுற் றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது. இந்த நிர்வாகக் குழுவானது முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும்.

பொருளாதார நிபுணரான மாண் டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி, அய்க்கிய நாடுகள் சபையின் மேனாள் துணை பொதுச் செயலாளர் மற்றும் அய்க்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 6ஆவது செயல் இயக்குநர் எரிக்.எஸ்.சோல்ஹிம். நிலையான கடற்கரை மேலாண் மைக்கான தேசிய மய்யத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச் சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர் ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் இந்நிர்வாகக் குழுவின் சிறப்பு உறுப்பினர்களாவர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர், அரசு துறைகளான தொழில், தொழில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், நிதி. எரிசக்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலம், வேளாண்மை மற்றும் உழவர் நலம் ஆகியவற்றின் மூத்த அரசு செயலாளர்கள் இந்நிர் வாகக் குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவர். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்நிர்வாகக் குழுவானது மூன்று மாதங்களுக்கு அல்லது தேவைக்கு ஏற்ப கூடும். இந்நிர்வாகக் குழு தனது குறிக்கோள்களை செயல்முறைகளை தானே வகுத்துக்கொள்ளும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment