தமிழர் தலைவர் 90 ஆவது பிறந்த நாளை பெரியார் சிந்தனைப் பெருவிழாவாக நடத்த முடிவு காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் தமிழர் தலைவர் 90 ஆவது பிறந்த நாளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தமிழர் தலைவர் 90 ஆவது பிறந்த நாளை பெரியார் சிந்தனைப் பெருவிழாவாக நடத்த முடிவு காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் தமிழர் தலைவர் 90 ஆவது பிறந்த நாளை

காரைக்குடி, அக்.23- காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி தலைமையில் 19.10.2022 அன்று காரைக்குடி குறள் அரங்கில் நடைபெற்றது. மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு சேகர், மாநில அமைப்பு செய லாளர் வே.செல்வம், மண்டல செயலாளர் அ.மகேந்திராசன் , மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய தொழிலா ளரணி செயலாளர் மு.சேகர், 08.10.2022 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழு முடிவுகளில் முதன்மையான வீடுதோறும் ‘விடுதலை' இயக்கத்தை எவ்வாறு செயலாற் றுவது குறித்தும், மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள தலைவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் களை குழுவாக இணைந்து சந்தித்து சந்தாக்களைத் திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து உரையாற்றிய அமைப்புச் செயலாளர் வே.செல்வம் பேசும்போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 அகவையில் தமிழர் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் பெரும்பணியையும், திராவிட மாடல் அரசின் திசை காட்டியாக இருந்து வழிகாட்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் நீண்டு வாழ விடுதலையை திரட்டி வழங்கு வதே அரு மருந்தாகும் என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, தமிழர் தலைவர் அய்யாவின் 90 ஆவது பிறந்த பெரியார் சிந்தனைப் பெருவிழாவாகவும், பகுத்தறி வாளர் கழகம் சார்பில் கருத்தரங்கம், ஒன்றி யங்கள் தோறும் தெருமுனைப் பரப்புரை கூட்டங்கள் நடத்த இருக்கும் திட்டங்களை அறிவித்தார்.

நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சாமிதிராவிடமணி, ப.க.மாவட்ட தலைவர் சு.முழுமதி, நகர தலைவர் ந.ஜெகதீசன், மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண் ணன், கல்லல் ஒன்றிய தலைவர் ஆ.சுப்பையா, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சி.செல்வ மணி, கழகப் பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா, எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் குமரன் தாஸ், சொ.சேகர் (த.நா.அ.போ.க) ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment