சிவகங்கை அக். 11- சிவகங்கை அருகே 400 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் நகரம்பட்டி யில் இடிந்து சிதலமடைந்துள்ள சிவன் கோவில் சுவரில் பழங்கால எழுத்துகள் இருப்பதாக சிவ கங்கை தொல்நடை குழுவிற்கு தகவல் அளித்தார். தொடர்ந்து அவ்விடத்தில் சிவகங்கை தொல் நடை குழு நிறுவனர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், உறுப் பினர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து காளிராசா கூறு கையில், இங்கு 400 ஆண்டுகள் பழைமையான கோவிலில், கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பழைமை யான கல்வெட்டில் மேலே திருத்தியூர் முட்டத்து பாகனேரி என வழங் கப்படுகிறது, மேலும் மருது பாண்டியர்கள் வாழ்ந்த 17ஆ-ம் நூற்றாண்டில் வாளுக்கு வேலி இப்பகுதியில் படைத்தளபதியாக வாழ்ந்த செய்தியை இலக்கியங் கள் வழி அறிய முடிகிறது. பாக னேரி நாட்டில் ஆறு முதன்மை யான ஊர்களில் ஒன்றாகவும் நகரத்தார் வாழ்ந்த ஊராதலால் நகரம் பட்டி எனவும் இன்றைய நகரம் பட்டி வழங்கப்படுகிறது. நகரம் பட்டி ஊருக்கு வெளியே கதவங் குடி கண்மாய்ப் பகுதியில் சிதல மடைந்த பழைமையான சிவன் கோவில் உள்ளது. அதில் ஒரு பக்க சுவரில் நான்கு கற்களில் தொடர்ச்சியான கல்வெட்டு காணப்படுகிறது.
கல்வெட்டு எழுத்தமைப்பைக் கொண்டு 15, 16ஆ-ம் நூற்றாண் டாக இருக்கலாம். கல்வெட்டு உள்ள கற்கள் ஆங்காங்கே இடிந்து எழுத்துகள் முழுவது மாக தெரியவில்லை. அதில் தெரியும் சில எழுத்துகளில் கத வங்குடி வாக்கிய நல்லூர் நாயனார் அகத்தீஸ்வரமுடைய நாயனார் கோவில் அதிட்டா னாம், உபானம் கட்டுவதாக சொன்ன வண்ணஞ் செய்தார் என்ற சொற்கள் மூன்று முறை வருகிறது. ஓரிடத்தில் உடையார் சூரிய தேவர் சொன்ன வண்ணம் செய்தார் என வருவதால் உடை யார் சூரிய தேவர் என்பவர் இப் பகுதியின் ஆட்சியாளராகவோ அல்லது அரசு அலுவலராகவோ இருந்திருக்கலாம் என்று கூறினார்.

No comments:
Post a Comment