சிறீவில்லிப்புத்தூர், அக். 11- டிராக்டர் டிரைலர் திருட்டு வழக்கில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட் டனர். சிறீவில்லிபுத்தூர்-ராஜ பாளையம் சாலையில் திருப்பாற் கடல் கண்மாயில் நடைபாதை அமைக்கும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ராஜபாளை யத்தில் இருந்து டிராக்டர் கொண்டு வரப்பட்டது.
அப்போது டிரைவர் கணே சன் டிராக்டரை தனியாகவும், டிரைலரை தனியாகவும் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது டிரைலரை காணவில்லை.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் சிறீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிறீ வில்லிபுத்தூர் அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது36), கருப்பசாமி (32) ஆகிய 2 பேரும் டிரைலரை திருடியது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய் தனர். கைது செய்யப்பட்ட கண்ணன் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க.வின் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாவட்ட செயலாளராக உள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment