கழகக் களப்பணி கொள்கை உறவுக்கு எமது அன்பார்ந்த வேண்டுகோள் - விண்ணப்பம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

கழகக் களப்பணி கொள்கை உறவுக்கு எமது அன்பார்ந்த வேண்டுகோள் - விண்ணப்பம்!

என்னைப் பொறுத்தவரையில், எனது பிறந்த நாள் முக்கியமானது அல்ல; அது ஒரு சாதாரண நிகழ்வு. அதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு நம் கொள்கை பரப்பலுக்குமான புதுப்புது முயற்சிகளும், பிரச்சாரங் களும் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகும்.

‘விடுதலை' சந்தாக்களைத் திரட்டித் தர கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும், இன உணர் வாளர்களும் தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சி கொள்கை அணியினரும் தங்கள் பங்களிப்பை, எதிர் பார்த்ததற்கு மேலாகவே தந்து ஊக்கப்படுத்தியமைக்கு எமது தலைதாழ்ந்த நன்றி!

பணி முடியவில்லை -

எதிரிகளின் பொய்ப் பிரச்சாரம்

ஒரு தொடர் அலைபோல - தொடரும் நிலையில்,

‘வீடுதோறும் விடுதலை' - முன்னெடுக்க -நாட்டைக் காப்பாற்ற நாளும் முயற்சி தொடர முடிவு!

எனவேதான் உழைப்புத் தேனீக்களே!

இரண்டாம் கட்டத்தை மிக லகுவாகச் செய்யும் எளிய திட்டத்தோடு ஒரு சிறப்பு ‘விடுதலை' வளர்ச்சிக் குழு' (Core Group) உருவாக்கப்பட்டு பணி தொடரவிருக்கிறார்கள்? 

அனைவரையும் அரவணைத்துச் செய்து முடிக்க வேண்டிய செழுமைப் பணி!

ஆகவே, 

கழகப் பொறுப்பாளர்களே,

இன உணர்வாளர்களே,

பெரியாரிஸ்டுகளே,

‘விடுதலை' விரும்பிகளே,

இந்தக் குழுவிற்கு உங்களது முழு ஒத்துழைப்பை நல்கி, ‘திசையெட்டும் ‘விடுதலை' பரப்புவதைத் தவிர வேறு எந்தப் பரிசும் பெரிதல்ல - அரிதல்ல!

எனவே, முப்பது நாள்களில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சந்தா திரட்டும் முழு வீச்சுப் பணி தொடர, முழு மூச்சாய் உழைத்திடுக!

கொள்கை விளைச்சலை  அறுவடை செய்வோம், வாரீர்!

‘‘விடுதலை'' வளர்ச்சிக் குழுவினரே வாரீர்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

11.10.2022

குறிப்பு: கீழ்க்கண்ட நான்கு குழுவினர் பொறுப்பில் இந்த சந்தா சேர்ப்புப் பணி தொடரும்:

ஒருங்கிணைப்பாளர்கள்: கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,  கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்

1. முனைவர் துரை.சந்திரசேகரன், த.சீ.இளந்திரையன்

2. தஞ்சை இரா.ஜெயக்குமார், ஈரோடு த.சண்முகம்

3. உரத்தநாடு இரா.குணசேகரன், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம்

4. திருவெறும்பூர் மு.சேகர், மதுரை வே.செல்வம்

இக்குழுவினர் பலரையும் ஆங்காங்கே இணைத்துக்கொண்டு செயலாற்றுவார்கள்.


No comments:

Post a Comment