சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) எல்லை 5 மடங்கு விரிவடைகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) எல்லை 5 மடங்கு விரிவடைகிறது

சென்னை,அக்.22- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) நிர்வாக எல்லையானது சென்னை மாவட்டம் தவிர்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள் ளூர், செங்கல்பட்டு மாவட்டங் களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1,189 சதுர கி.மீ. அளவுக்கு தற்போது உள்ளது. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி யில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லை விரி வாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.

அதில், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள், அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கி.மீ. அளவில் சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, 1,709 கிராமங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டது. அரசாணை வெளியிடப்பட்டு மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.

கடந்த அக்.11ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் அக்.14ஆம் தேதி விரிவாக்கத்துக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார். குறிப்பாக, 8,878 சதுர கி.மீ.க்கு பதில், 5,904சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, ஒப்புதல் அளிக்கப் பட்டது. இதற்கான அரசாணை நேற்று (21.10.2022) வெளியிடப் பட்டது. அதன்படி, காஞ்சி, திரு வள்ளூர், செங்கல்பட்டு, அரக் கோணம் வரையில், 1,225 கிரா மங்கள் புதிதாக சிஎம்டிஏ வரை யறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 1,189 சதுர கி.மீ. ஆக இருந்த சிஎம்டிஏ எல்லை, தற்போது 5 மடங்கு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment