தமிழ்நாட்டில் 7ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

தமிழ்நாட்டில் 7ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,அக்.5- தமிழ்நாட்டில் 7ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

7 மற்றும் 8ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திரு வண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை, அரி யலூர், பெரம்லூர்,திருச்சி, புதுக் கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மய்யம், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment