சுயமரியாதை வீரர் தஞ்சை ச.இறைவன் 84ஆம் பிறந்தநாள் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

சுயமரியாதை வீரர் தஞ்சை ச.இறைவன் 84ஆம் பிறந்தநாள் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து

தஞ்சை, அக். 5- தஞ்சை தி.மு.க மத்திய மாவட்ட அவைத்தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள தஞ்சாவூர் நகர்மன்ற மேனாள் தலைவர், சுயமரியாதை வீரர் ச.இறைவன் அவர்களுக்கு 84ஆம் ஆண்டு பிறந்தநாள் (02-10-2022) தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், கழகப்பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்

கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மண் டலத் தலைவர் மு.அய்யனார், மாநகரத் தலைவர் ப.நரேதிரன், மாநகரச் செயலாளர் அ.டேவிட், மாநில பக துணைத்தலைவர் கோபு. பழனிவேல், மாவட்ட ப.க தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க செயலாளர் பாவளர் பொன்னரசு, களிமடு அன்பழகன், இரா.வீரக் குமார் ஆகியோர் பிறந்தநாள் காணும்  இறைவன் அவர்களின் இல்லத்தில் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் உடன் அவரது மகள் பொறியாளர் கார்குழலி.


No comments:

Post a Comment