கும்பகோணம், அக்.23 கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 19.10.2022 புதன் மாலை 6 மணியளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடை பெற்றது.
தலைமை வகித்த கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், முன் னிலை வகித்த மாநில அமைப்புச் செய லாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் இலகுவாக இலக்கை அடைவது எப்படி, கிராமப் பிரச்சாரம், அமைப்பு பணிகள் குறித்தும் விளக்கமாக உரை யாற்றினார்கள்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ‘‘ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை'' நூல் அறிமுக கூட்டங்களை பொதுவெளியில் நடத்தி மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்துவது என வும், கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவாளர்கள் தோழமை இயக்கத்தினர் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் என அனைவரையும் சந்தித்து ‘விடுதலை' சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் (டிசம்பர் - 2) பரிசாக வழங்குவது, ஆசிரியர் பிறந்தநாள் பெரு விழாவினை மாவட்டம் முழு வதும் சுவரெழுத்து விளம்பரங்களை எழுதுவது என முடிவு செய்யப் பட்டது.
மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மண்டல செய லாளர் க.குருசாமி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் சு.விஜயக் குமார், தாராசுரம் இளங்கோவன், குடந்தை மாநகர செயலாளர் வழக் குரைஞர் பீ.இரமேஷ், மாவட்ட இளை ஞரணி தலைவர் சிவக்குமார், மாவட்ட ப.க செயலாளர் பேரா.சேதுராமன், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர் ஒன்றிய அமைப் பாளர் சிவக்குமார், குடந்தை ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மகளிரணி துணைச்செயலாளர் திரிபுரசுந்தரி, மகளிர் பாசறை செயலாளர் ராணி குருசாமி திருநாகேஸ்வரம் குரு, தஞ்சை நகர செயலாளர் அ.டேவிட் உள்ளிட்ட கழகத் தோழர் கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment