புதுடில்லி,அக்.27- காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே(80) நேற்று பதவியேற்றுக் கொண்டார். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலை வர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே போட்டி ஏற்பட் டது. இதில் கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1072 வாக்குகளும் பெற்றனர். காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை, டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் மல்லி கார்ஜுன கார்கேவிடம், கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி நேற்று (26.10.2022) வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மேனாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, "சாதாரண தொண் டரின் மகனை, கட்சித் தலைவராக உயர்த்திய காங்கிரஸ் கட்சிக்கு நன்றி. மக்களிடம் பரப்பப்படும் பொய் களையும், வெறுப்புகளையும் காங் கிரஸ் தகர்க்கும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்புவோர் ஒன்றிணைய வேண்டும். ராகுலின் தேசிய ஒற்றுமை நடைப்பயணம், நாட்டுக்கு புதிய சக்தியை அளித்து வருகிறது. கட்சியில் 50 சதவீத பதவிகள், 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.
காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, "கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி உற்சாகம் பெற்று, வலுப்பெறும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒற்று மையுடனும், பலத்துடனும் காங்கிரஸ் புதிய சவால்களை சமாளித்து முன்னேறும்.
கார்கே கடின உழைப்பால், உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். காங்கிரஸ் தலைவராக என்னால் முடிந்ததை, சிறப்பாகச் செய்தேன். தற்போது அனைத்துப் பொறுப்புகளில் இருந் தும் விடுபட்டுள்ளது நிம்மதியை அளிக்கிறது" என்றார்.
முன்னதாக, காந்தியார், மேனாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மேனாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராம் ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று, மல்லிகார்ஜுன கார்கே மரியாதை செலுத்தினார்.
தலைவராகப் பொறுப்பேற்ற கார்கே, கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பதிலாக, 47 பேர் அடங்கிய வழிகாட் டுதல் குழுவை நேற்று அமைத்தார்.

No comments:
Post a Comment