ஹிந்தி திணிப்பு: தமிழர்களே களம் காண வாரீர்! கவிப்பேரரசு வைரமுத்து அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

ஹிந்தி திணிப்பு: தமிழர்களே களம் காண வாரீர்! கவிப்பேரரசு வைரமுத்து அழைப்பு

சென்னை, அக்.27 ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் உணர்ச்சியுடன் போராட வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்தார்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிப் பேரரசு வைரமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக்குழு வின் பரிந்துரைகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தியை திணிக்க முயல்கின்றன. தமிழ்நாட்டில் இதுகுறித்த விழிப்புணர்வு பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு ஹிந்தி திணிப்புக்கு எதிராக தனித்தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறது. 

இந்த நிலையில் கவிப் பேரரசு வைரமுத்து தலைமையில், தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்த ஹிந்தி திணிப்புக்கு எதிராக சென்னை வள் ளுவர் கோட்டத்தில் நேற்று (26.10.2022) ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.  இந்த போராட்டத்தில் தமிழறி ஞர்கள், சான்றோர்கள், கல்வியா ளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கவிப் பேரசு வைரமுத்து பேசியதாவது, 1965இ-ல் நேர்ந்த ஹிந்தி எதிர்ப்பு எழுச்சியை விட, 2022இல் தமிழர்கள் கூடுதல் எழுச்சி பெற வேண்டும். ஹிந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணிகளில் சேர முடியாது என்ற நிலையை உருவாக்க முயற்சி _ பயிற்சி மொழியாக ஹிந்தியை கொண்டு வந்து ஆங்கிலத்தை அகற்ற முயற்சி _ வாழ்வோடும் வசதியோடும் இருக்க தமிழ், ஆங்கிலம் தெரிந்தால் போதும். ஹிந்தி மொழி மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை. ஹிந்தி மொழியை மதிக்கிறோம். 

அதை திணிக்காதீர்கள். தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போன்றது. அதை அழித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வரும். ஹிந்தியை நுழைய விட்டால் என்ன ஆகும்? முந்திரி இருக்கும் மூட்டையில், வண்டுகளை நுழைய விட்டால் முந்திரியை அழித்து விடும். நேற்று பிறந்தது ஹிந்தி மொழி.

 அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி புறந்தள்ளுவீர்கள்?. திராவிட வழி என்பதும் தமிழ் மொழி என்பதும் ஒன்றுதான். 

 இவ்வாறு அவர் உரையாற் 

றினார்.


No comments:

Post a Comment