மீண்டும் நடைப் பயணம் தொடங்கினார் ராகுல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

மீண்டும் நடைப் பயணம் தொடங்கினார் ராகுல்

அய்தராபாத், அக் 27 3 நாள் ஓய்வுக்குப்பின் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை தெலுங்கானாவில் இருந்து வியாழக்கிழமை மீண்டும் தொடங்கினார். 

 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கிய இந்த நடைபயணம் கடந்த 23-ஆம் தேதி கர்நாடகாவின் ராய்ச்சூரை கடந்து தெலங்கானாவில் நுழைந்தது. அத்துடன் தீபாவளிக்காக 3 நாட்கள் ஓய்வு விடப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி டில்லி திரும்பினார்.  இந்த 3 நாட்கள் ஓய்வுக் குப்பின் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நடைப் பயணம்  தொடங் குகிறது. தெலுங்கானாவின் நாராயண் பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட மக்தாலில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு இந்தப் பயணம் தொடங் கியது.  இன்று சுமார் 27 கி.மீ. நடைப்பயணம் செல்லும் ராகுல் காந்தி, இரவில் மக்தாலில் உள்ள சிறிபாலாஜி தொழிற்சாலையில் ஓய்வெடுக்கிறார். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 16 நாட்கள் நடக்கிறது. இதில் 19 சட்டசபை தொகுதிகள், 7 நாடாளு மன்ற தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கி.மீ. தூரத்தை கடந்து அடுத்த மாதம் (நவம்பர்) 7ஆம் தேதி மராட்டியத்தில் நுழைகிறார். முன்ன தாக நவம்பர் 4-ஆம் தேதி நடைப் பயணத்திற்கு ஓய்வு விடப்படுகிறது. தெலங்கானாவில் இந்த நடைப் பயணத்தின் போது   அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களையும் அவர் சந்தித்து பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


No comments:

Post a Comment