செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

செய்திச் சுருக்கம்

பறிமுதல்

பொது விநியோக திட்டத்தில் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. குற்றச் செயலில் ஈடுபட்ட 195 பேரும் கைது என தமிழ்நாடு அரசு தகவல்.

உத்தரவு

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட வுள்ளதால், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மீட்பு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து இரண்டு சோழர் கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பட்டியல்

நீதிமன்ற ஆணையின்படி பதிவுத் துறையில் இடஒதுக் கீடு மற்றும் முதுநிலை அடிப்படையில் புதிய சார்பதிவாளர் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

நியமனம்

ஒன்றிய அரசின் அமைச்சகத்தில் பணியாற்றிய 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாட்டில் மாவட்ட உதவி ஆட்சியர்களாக நியமித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு.

குழு

மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, எஸ்சி தகுதி (அந்தஸ்து) வழங்குவது பற்றி ஆராய உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரை செய்யும் படி தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.

வேட்பாளர்

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி யிடும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தகவல் அறிய...

ஒன்றிய தேர்வாணையத்தின் UPS Cofficiat app  என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. தேர்வு அறிவிப்புகள், முடிவுகளை இனி மொபைல் ஆப்-இல் பார்க்கலாம்.


No comments:

Post a Comment