கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

கோவை, அக். 22- கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.10.2022 அன்று பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர் பெ.சின்னசாமி தலைமை யில்  கோவை மண்டல திராவிடர் கழக செயலா ளர் ச. சிற்றரசு,  மாவட்ட தலைவர் ம. சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் பழ.அன்பரசு ஆகியோர் முன்னிலையில் பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் அக்ரி நாக ராஜ் வரவேற்புரையுடன் கழக முன்னோடிகளுக்கு பயனாடை அணிவிக்கப் பட்டு கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழ கத்தினை கட்டமைப்பது குறித்தும் ,ஒன்றியங்களில் அமைப்பினை ஏற்படுத்து தல் உறுப்பினர் சேர்க்கை, விடுதலை,  உண்மை,  பெரியார் பிஞ்சு, திரா விடப் பொழில், 

தி  மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றிற்கு சந்தா சேர்ப்பது குறித்தும் பகுத் தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச் செல்வன், பொதுச் செய லாளர் வி.மோகன், மாநில துணைத்தலைவர் தருமன்.வீரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ஜெக நாதன், கோவை போத் தனூர் இரா. கலியமூர்த்தி ஆகியோர் பகுத்தறிவா ளர் கழகத்தில் உறுப்பி னர்களாக இணைத்துக் கொண்டு கருத்துரை வழங்கினார்கள். மேலும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத்தலை வர் நா. மருதமுத்து, பா.சு. அப்துல்ரகுமான், இராஜ சேகர், பொள்ளாச்சி சுப் பிரமணியம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 

நிகழ்ச்சியில் கோவை அம்சகுமாரி,  அவினாசி மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.  மாவட்ட தலைவராக வழக்குரைஞர் பெ.சின்ன சாமி, மாவட்ட செயலா ளராக பொள்ளாச்சி ஜெகநாதன்,மாவட்ட துணைத்தலைவராக நா. மருதமுத்து, மாவட்ட அமைப்பாளராக அக்ரி நாகராஜ்,  மாவட்ட ஊட கத்துறை அமைப்பாள ராக இராஜசேகர் ஆகி யோர் புதிய பொறுப்பா ளர்களாக  மாநில தலை வர் இரா. தமிழ்செல்வன் அறிவித்தார்.

சா. சித்ரவேல் நன்றியு ரையுடன் கூட்டம் சிறப் புடன் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment