நமக்கென பெரியார் திடல் மட்டுமே உள்ளது! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பெருமிதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

நமக்கென பெரியார் திடல் மட்டுமே உள்ளது! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பெருமிதம்!

காரைக்குடி, அக். 22- திராவிட நட்புக் கழக அறிமுக விழா 15.10.2022 சனிக்கிழமை அன்று காரைக்குடியில்  நடைபெற்றது. விழாவில் வாழ்த் துரை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பாஜக வுக்கு வழிகாட்ட 

ஆர்.எஸ்.எஸ் உள்ளதைப்போல நமக்கு வழிகாட்ட தாய்க்கழக மாம் திராவிடர் கழகமும் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் களும் இருக்கின்றனர் எனக் கூறினார்.

அவருக்கு முன்பாகப் பேசிய அம்பேத்கர் பெரியார் காரல் மார்க்ஸ் (அ.பெ.கா) படிப்பு வட்ட நிறுவனர் மருத்துவர் நா.ஜெயராமன்  தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பல்வேறு பெயர்களில் கிராமப் புறங்களில் ஊடுருவி குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களிடையே பிள்ளையார் சிலையையும் பணத்தையும் கொடுத்து தம்பக் கம் ஈர்த்து தன்வயப்படுத்த முயற் சிப்பதைப்பற்றி எடுத்துரைத்து நாம் விழிப்போடு செயல்படாது போனால் பெரியார்மண் காவி மண்ணாக மாறும் அபாயம் பற்றி எச்சரித்தார்.

இந்நிகழ்விற்கு ஊரக வளர்ச் சித் துறை அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங் கினார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.மாங்குடி, காரைக்குடி நகர்மன்றத் தலை வர் சே. முத்துத்துரை, துணைத் தலைவர் நா.குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திராவிட நட்புக்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ. சிங்க ராயர் நோக்கவுரை ஆற்றினார், பாதிரியார் எஸ்.தனிஷ்லாஸ் வரவேற்றார். 

தீர்மானங்கள் :

1)கடந்த பத்தாண்டு ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சிகளைப் போல இல்லாமல் மீண்டும் தமிழ் நாட்டில் கல்வி, வேலைவாய்ப் புகள் அனைத்தும் தமிழ்நாட்ட வர்கே வழங்கப்பட ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடு அர சைக் கேட்டுக் கொள்கிறோம்.

2) காரைக்குடியில் துவங்கப் பட்டுள்ள அரசு சட்டக் கல்லூ ரிக்கு செட்டிநாட்டுப் பகுதியில் திராவிட இயக்கத்தை கட்டி எழுப்பிய சுயமரியாதைச் சுட ரொளி அய்யா இராமசுப்பையா அவர்களது பெயரைச் சூட்ட வேண்டும் என முன் மொழிந்த தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் கோரிக்கையை திராவிட நட்புக் கழகம் வழி மொழிகிறது.

3) இந்தியை பயிற்று மொழி யாக்கி இந்தி பேசாத மாநில மாணவர்கள் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதை தடுக்க முனையும் சூழ்ச்சியை திராவிட நட்புக் கழகம் வன்மையாக கண்டிக் கிறது. என்ற மூன்று தீர்மானங் களை மாவட்ட அமைப்பாளர் தோழர் ச.சிதம்பரம் முன் மொழிந்தார். 

இறுதியாக திராவிட நட்புக் கழகத்தில் இந்துக்கள் கிறிஸ்த வர்கள் இசுலாமியர்கள் மட்டு மல்லாமல் கடவுள் மத நம்பிக் கையற்ற பகுத்தறிவாளர்களும் ஒன்றாக இணைந்து மதவெறி பாஜகவை வீழ்த்த வேண்டியதன் தேவையை விளக்கி திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா.சுபவீரபாண் டியன் நிறைவுரை ஆற்றினார். 

இந்நிகழ்வில் திமுக, திரா விடர் கழகத் தோழர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வர்களும் பங்கேற்றுச் சிறப்பித் தனர்.

No comments:

Post a Comment