இரண்டாவது முறை தி.மு.க. தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

இரண்டாவது முறை தி.மு.க. தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை, அக்.8 தி.மு.க. தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.10.2022) வேட்பு மனு தாக்கல் செய்தார். நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் 2ஆ-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார். தி.மு.க.வின் 15-ஆவது உள்கட்சித் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக் கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில், ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்து, இதில் தேர்வான வர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். 

இந்த நிலையில், தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நாளை (9.10.2022) நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் முன்னிலையில் அறிவிக்கப் படும். 

மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் 

இந்த உள்கட்சித் தேர்தலில் தி.மு.க. தலைவராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (7.10.2022) அண்ணா அறிவாலயம் வந்தார். மதியம் 12.10 மணிக்கு தி.மு.க. தலைவர் பதவிக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிந்து, 5 பேர் வழிமொழிந்து இருந்தனர். வேட்பு மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மீண்டும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். அவர்களும் முறைப்படி வேட்பு மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத் தியதுடன், அவர்களுடைய மனுக்களை யும் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிந்து, 5 பேர் வழிமொழிந்து இருந்தனர்.  அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செய லாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை 5 மணி வரை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் போட்டிப்போட்டுக் கொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதிகபட்சமாக அமைச்சர் ஆவடி நாசர் 32 வேட்பு மனுக்களை மு.க.ஸ்டா லின் பெயரில் தாக்கல் செய்தார். வேட்பு மனு கட்டணம் ரூ.50 ஆயிரம் மற்றும் வேட்பு மனு தாக்கலுக்கான விண் ணப்பக் கட்டணம் ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத் தக்கது.  

தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு கலைஞர் அரங்கத்தில் இருந்து வெளியே வந்ததும், தனது காரில் ஏறாமல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து வணக்கம் செலுத்தியபடி அறிவாலய வளாகத் திற்குள் நடந்தபடியே தனது அலுவலக அறைக்கு சென்றார். இவ்வாறு நடந்து வரும் போது, கட்சி நிர்வாகிகள் அவ ருக்கு பொன்னாடை மற்றும் புத்தகங் களை பரிசாக வழங்கினர். மேலும், அலுவலக அறையில் இருந்தபடி முக்கிய நிர்வாகிகளை சந்தித்துவிட்டு புறப்பட்டு சென்றார். 

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர்  மற்றும் அறிஞர் அண்ணாவின் நினைவிடங்களுக்கு சென்று வேட்பு மனுவை வைத்து வணங்கிவிட்டு வந்தார். 

அதேபோன்று, வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று கலைஞரின் உருவப்படத்துக்கு ரோஜாப்பூவை வைத்து வணங்கினார். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நாளை (9.10.2022) நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது சுமார் 500-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தன. எத்தனை மனுக்கள் வேட்பு மனுவாக தாக்கல் செய்யப்பட்டன என்பது பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment