கேள்வி: ஹிந்துக்களை இழிவு செய்து பேசும் ஆ. இராசா, இதர மதங்களைப் பற்றிப் பேச திராணி உண்டா?
பதில்: மற்ற மதக்காரர்களை எதிர்த்துப் பேச ராசாவுக்குத் திராணி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள் நீங்கள்? நான் பேசுவதைத் தடுக்க ஹிந்துக்களுக்குத் துணிவு இருக்கிறதா என்று கேட்கிறார் ராசா.
('துக்ளக்' 12.10.2022 பக்கம் 3)
'சிண்டு முடிந்திடுவாய்ப் போற்றி!' என்று ஆரிய மாயையில் எழுதினார் அறிஞர் அண்ணா. அதே போல இராசாவுக்கு எதிராக ஹிந்துக்களைத் தூண்டி விடும் பார்ப்பன விஷப் பாம்பு படம் எடுத்து ஆடுகிறது.
மானமிகு ஆ. இராசாவோ - சுயமரியாதையுள்ள பார்ப்பனர் அல்லாதாரோ - திராவிட இயக்கத்தாரோ ஹிந்துக்களுக்குள்ளேயே பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி, பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், பிர்மாவின் கால்களில் பிறந்தவன் சூத்திரன் என்றும், சூத்திரர்கள் தேவடியாள் மக்கள் என்றும் கூறும் மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராக பார்ப்பனர் அல்லாதாரைத் தூண்டிவிட ஒரே ஒரு நிமிடம் போதாதா?
நான் ஒரு சனாதன ஹிந்து என்று சொன்ன காந்தியார் அவர்களை ஓர் இந்துவாகிய நாதுராம் கோட்சே என்ற மராட்டிய சித்பவன் பார்ப்பானே சுட்டுக் கொன்றானே - இதுகுறித்து இந்தக் குள்ள நரி 'துக்ளக்' கூட்டம் இன்றுவரை ஒரு வரி எழுதியதுண்டா?
இதை வைத்து கோட்சே ஒரு பார்ப்பான் என்கிற காரணத்தால் அவனைக் காப்பாற்றும் 'துக்ளக்' பார்ப்பனக் கூட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட எவ்வளவு நேரம் பிடிக்கும்?
காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது மும்பையில் பார்ப்பனர்கள் தாக்கப்படவில்லையா? அக்கிரகார வீடுகள் நாசப்படுத்தப்படவில்லையா?
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் நினைத்திருந்தால், கொஞ்சம் கண் ஜாடை காட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் - - & குருமூர்த்திகள் பெரியாரை அல்லவா சேவிக்க வேண்டும்.
வானொலியில் பேசி மக்களை அமைதிப்படுத்தியவர் தந்தை பெரியார் என்பது நினைவிருக்கட்டும். ரொம்பவும் துள்ள வேண்டாம்!
சாது மிரளாமல் பார்த்துக் கொள்க!
No comments:
Post a Comment