தினமலர் (23.10.2022) பக்கம் 6இல் வெளிவந்துள்ள (இது உங்கள் இடம்) கடிதத்தில் வெளியிடப்பட்ட வாசகம்.
"இல்லாத திராவிடத்தை இருப் பது போல காட்டும் இந்த திராவிட திருடர்களும், திராவிடமும் ஒழிந் தால் தான் தமிழகம் வளமாகும் - இல்லை எனில்சிரமமே!"
இந்தக் கடிதத்திற்குக் கொடுக் கப்பட்ட தலைப்பு "திராவிட திருடர்கள் ஒழிய வேண்டும்" என்பதாகும்.
திராவிடர்களை அசுரர்கள் என்றனர், அரக்கர்கள் என்றனர், குரங்குகள் என்றனர், ராட்சதர்கள் என்றனர், சூத்திரர்கள் என்றனர் அதாவது வேசி மக்கள் என்றனர்.
இப்பொழுது திருடர்கள் என் கின்றனர் - தி.மு.க. அரசு கண்டும் காணாமல் போவதால் ரொம்பதான் துள்ளுகிறார்கள். வாய்க் கொழுப் பாகப் பேசுகிறார்கள் ஏதேதோ எழுதுகிறார்கள்.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டே!
No comments:
Post a Comment