மின்சாரம்
மின் பரிமாற்றங்களில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.17,000 கோடிக்கு மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தேர்வு
எம்இ, எம்பிஏ உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் வரும் 2023ஆம் ஆண்டில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 25, 26ஆம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
கூடாது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்தால் சாலையில் நீர் தேங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு.
வலியுறுத்தல்
காவிரி, கொள்ளிடம், வெள்ளாற்றின் குறுக்கே ரூ.2,400 கோடியில் தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தி யுள்ளார்.
அறிவிப்பு
ஒன்றிய அரசின் தேர்வாணையம் நடத்தும் அய்ஏஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட தேர்விற்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரம்
ஊரக சுகாதார திட்டத்தில், தமிழ்நாடு தேசிய அளவில் 3ஆம் இடம் பெற்றுள்ளது.
உயர்வு
அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் 47 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
கைது
புதுச்சேரியில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோரை துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
நீக்கம்
இலவச மின்சார இணைப்பை வேறொருவருக்கு வழங்குவதற்காக தருமபுரி கொலசனஅள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாயி இறந்ததாக சான்றிதழ் அளித்த கிராம நிர்வாக அதிகாரிகள் இருவரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்தார்.
செயலிழந்தது
கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய்க் கோளை ஆய்வு செய்த மங்கள்யான் விண்கலம் செயல் இழந்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.
நீட்டிப்பு
குறிப்பிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரியில் தற்போதுள்ள சலுகை 2023-ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு.
No comments:
Post a Comment