வடசென்னை மாவட்ட இளைஞரணி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு காலணி வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

வடசென்னை மாவட்ட இளைஞரணி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு காலணி வழங்கல்

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் ஏற்பாட்டில் சென்னை அமைந்தகரையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் 115 மாணவர்களுக்கு 26.09.2022 அன்று  காலணிகள் வழங்கப்பட்டன. வடசென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சாம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொடையாளர் பரதநாட்டிய ஆசிரியர் சிறீதேவி மற்றும் காவல்துறை ஆய்வாளர் கிருபநிதி ஆகியோர் மாணவர்களுக்கு காலணிகளை வழங்கினர். மேலும் திமுக வழக்குரைஞர் அணியின் பகுதி அமைப்பாளர் திவாகர் மற்றும் வழக்குரைஞர் ஆதில் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசெல்வி அனைவரையும் வரவேற்று சிறப்பு செய்தார்.


No comments:

Post a Comment