கீழப்பாவூர், அக். 3- தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நகர திராவிடர் கழக மாதாந்திர பெரியார் குடும்பங்களின் கலந்து ரையாடல் கூட்டம் 1.10.2022 அன்று மாலை 7 மணிய ளவில் நகர தலை வர் மு.இராமசாமி தலைமை யில் நடைபெற்றது கூட் டத்தில் கீழ்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர் களின் 144ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட் டம் (18.9.2022) அன்று கீழப்பாவூர் பாண்டிய னார் திடலில் நடை பெற்றது இக்கூட்டத்தில் கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு நன் கொடை அளித்தவர்க ளுக்கும், உறுதுணை புரிந்தவர்களுக்கும் மற்றும் இக்கூட்டத்தில் பங்கு பெற்றவர்களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
அறிஞர் அண்ணா வின் 114ஆவது பிறந்த நாள் விழாவை கொண் டாடும் இக்காலகட்டத் தில் கீழப்பாவூரில் அறி ஞர் அண்ணாவின் சிலை சுமார் 35 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் முயற்சி செய்தும் இன்று வரை நிறுவப்படவில்லை. அறிஞர் அண்ணா தந்தை பெரியாரின் தலைமக னாக விளங்கியதோடு, அவர் முதலமைச்சர் பொறுப்பேற்றதும் சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ததுடன், சட்டமன்றத்தில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவரே என முழங்கியதோடு, பெரியார் கொள்கை களை சட்டமாகவும் இயற் றினார். எனவே கழக தலைமையில், திராவிட இயக்கத்தின் சார்பில் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவிட அதற்கான இடத்தினை பேரூராட்சி மன்றம் மூலம் பெறலாகு மென தீர்மானம் வைத்து பெறுவதென இக்கூட் டம் மூலம் தீர்மானிக்கப் படுகிறது.

No comments:
Post a Comment