விருதுகள் தேடி வருது வீரமணியை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

விருதுகள் தேடி வருது வீரமணியை

உலகெங்கும் மலரும் மனிதநேயர் விருது

தமிழர் தலைவர் வீரமணி பணிதேடி வருது

மனிதப்பற்றின் ஊற்றுதானே அய்யா பெரியார்

மணம்பரப்பும் தொண்டுதானே அம்மாமணி அம்மையார்

அவர்கள்வழி நடக்கும் தலைவர் வீரமணியார்

இவரன்றி யாரிருக்கார் மனிதநேய விருதார்

என்றபெரும் புகழ்க்குரியர் கருஞ்சட்டைப் படையார்!

அமெரிக்காவும் கனடாவும் அணைத்து நெகிழ்கிறார்

சிங்கப்பூரும் மலேசியாவும் சிறப்பித்து மகிழ்கிறார்

செருமனியும் பர்மாவும் பாசமிகப் பகிர்கிறார்

பெரியார் பன்னாட்டு அமைப்பினர் பேறுற்றார்

நாத்திகத்தின் தலைமையிடம் தமிழ்நாடு என்கிறார்

சாதனைக்கு வீரமணி வித்தாய் இருக்கிறார்

சரித்திரத்தில் வைரமணி முத்தாய் ஒளிர்கின்றார்

விரிவுல கனைத்தையும் சிறுகனூர் ஈர்த்திடும்

பெரியார் உலகின் சொத்தாய் இருக்கிறார்!

-முனைவர் அதிரடி க. அன்பழகன்


No comments:

Post a Comment