பெல்லாரி, அக்.3 ராகுல் காந்தியுடன் ’பாரத் ஜோடோ’ நடைப்பய ணத்தில் வருகிற 6-ஆம் தேதி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். இதற்காக அவர்கள் கருநாடகம் வருகிறார்கள்.
அகில இந்திய காங் கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் நடைப்பய ணத்தை கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ஆம்தேதி தமிழ்நாடு கன்னியா குமரியில் தொடங்கி னார். தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் நடைப் பயணம் நடை பெற்றது. ராகுல்காந்தியின் நடைப் பயணம் கடந்த 30-ஆம் தேதி கரு நாடகத்துக்குள் நுழைந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண் டலு பேட்டையில் ராகுல்காந் திக்கு காங்கிரசார் வரவேற்பு அளித்தனர்.
ராகுல்காந்தி, காந்தியார் சிலைக்கு மாலை அணி வித்த பிறகு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:- இந்தி யாவின் மகத்தான மகனை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். அகிம்சை, ஒற் றுமை, சமத்துவம் மற்றும் நீதி என காந்தியாரின் பாதையில் நடக்கிறோம்.
காந்தியார், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்து போராடியது போல, காந் தியை கொன்ற சித்தாந்தத் துடன் நாங்கள் போரில் இறங்கி உள்ளோம்.
ஹிம்சா (வன்முறை), அசத்யா (பொய்கள்) அரசியலுக்கு எதிராக பாரத் ஜோடோ நடைப் பயணம் அகிம்சை மற்றும் சுயராஜ்ஜின் செய்தியை பரப்பும். உறுதியான குரல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,600 கிலோ மீட்டர் தூரம் நம்முடன் நடைப் பயண மாக வருபவர்களாக இருந்தாலும் சரி, குறுகிய காலத்துக்கு நம்முடன் நடந்து வரும் லட்சக்கணக் கான மக்களாக இருந் தாலும் சரி, இது சுயராஜ்ஜியத்தின் வெற்றியே. அச்சம், வெறுப்பு, பிரிவினை அரசியலுக்கு எதிராக இந்திய மக்களின் அமைதி யான மற்றும் உறுதியான குரலாக இந்த நடைப் பயணம் உள்ளது. ஏராள மான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நடைப்பய ணத்தில் பங்கேற்றுள் ளனர். மைசூருவில் இருந்து காஷ்மீர் வரையிலான பயணத்தை தொடரும் போது, இந்தியா முழு வதும் உள்ள எனது சக குடிமக்கள் அகிம்சை மற்றும் நல்லெண்ணம் என்ற உணர்வில் எங்களு டன் சேர்ந்து நடக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பதனவாலு கிராமத்தில் இருந்து நடைப்பயணத் தைத் தொடங்கிய ராகுல் காந்தி, நேற்று (2.10.2022) மாலை மைசூரு நகருக் குள் நுழைந்தார்.
சோனியா காந்தி வருகை
இந்த நடைப்பயணத் தில் ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய் துள்ளனர். அதன்படி சோனியா மற்றும் பிரி யங்கா காந்தி ஆகியோர் நாளை (04.10.2022) கருநாடகம் வருகி றார்கள். அவர்கள் டில் லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு வுக்கு வரவுள்ளனர்.
வருகிற 6-ஆம் தேதி அவர்கள் ராகுல் காந் தியின் நடைப் பயணத் தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படு கிறது. சிறிது தூரம் அவர்கள் நடைப் பயணத்தில் பங்கேற்று நடப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment