புதுடில்லி. அக்.3 ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது. இதற்கான விருதை குடியரசுத் தலைவடிடம் இருந்து அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.
ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் உள்ள 1 கோடியே 24 லட்சத்து 93 ஆயிரம் வீடுகளில் இதுவரை 69 லட்சத்து 14 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 55 சதவீத வீடுகள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. மீதமுள்ள 55 லட்சத்து 79 ஆயிரம் வீடுகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் அதிக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது. இதற்கான விருதை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார். அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பொன் னையா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத்தை, அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்தார். அப்போது, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் கோடிக்கு 42 புதிய குடிநீர் திட்டங் களுக்கும், 56 குடிநீர் திட்டங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. இதன் காரணமாக பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க போதுமான கால அவகாசம் தேவைப் படுவதால் ஜல்ஜீவன் திட் டத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்ய காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங் களில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ள இடங்களின் அருகே தடுப் பணைகள் கட்டுவதற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.2,400 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க புதிய திட்டங்களை செயல்படுத்த ரூ.700 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர்யிடம் கோரிக்கை விடுத்தார்.
சுகாதாரத்துக்காக விருது
ஊரக பகுதிகளில் உள்ள சுகா தாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன் னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாக கொண்டு இந்தியாவில் உள்ள மாநிலங்களை தரவரிசைப் படுத்தியதில் தமிழ்நாட்டில் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதற்காக வழங்கப்பட்ட விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பாராட்டு சான்றிதழும் வழங்கப் பட்டது. அப்போது துறையின் முதன்மை செயலாளர் பெ.அமுதா உடன் இருந்தார்.

No comments:
Post a Comment