மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்துக்குக் காரணம் ஒன்றிய அரசே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்துக்குக் காரணம் ஒன்றிய அரசே!

மதுரை,அக்.8-   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தில் ரூ.1,977 கோடியாக உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீடுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காததாலேயே கட்டுமானப் பணிக்கு இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக ஒன்றிய அரசு 28.2.2015 அன்று அறிவித்தது. பல்வேறு இழுபறிக்குப் பிறகு, மருத்துவமனை அமைக்க 2018இல் மதுரை தோப்பூர் தேர்வானது. 27.1.2019 அன்று பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. மாணவர் சேர்க்கை மட்டும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கி தற்போது முதலாண்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை யுடன் ஒரே நேரத்தில் அறிவிக்கப் பட்ட இமாச்சல பிரதேச மாநிலத் தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்து வமனை கட்டுமானப் பணிகள் முடிந்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் (6.10.2022) திறந்து வைத்துள்ளார். ஆனால், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவம னைக்கு ஒதுக்கப்பட்ட இடம் பொட்டல் காடாகவே உள்ளது. சுற்றுச்சுவர் எழுப்பி யதைத் தவிர, வேறு எந்த பணியும் நடக்க வில்லை. 

இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறிய தாவது: 5ஆவது கட்டமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பட்டியலில் மதுரை, பிலாஸ்பூர் இடம்பெற்றி ருந்தன. இதில், இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் மட்டும் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்ப ட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலங்களவைக்கு தேர்வான மாநிலம் இமாச்சல பிரதேசம். பிலாஸ்பூர் தொகுதியில் இருந்து 2 முறை அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். அதனால், பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத் துவமனைக்கு ஒன்றிய அரசு தனி கவனம் செலுத்தி தற்போது திறந்து வைத்துள்ளது.

 தொடக்கத்தில் மதுரை எய்ம்ஸ் மருத் துவமனைக்கு ரூ.1,200 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு, கால தாமதத்தால் திட்ட மதிப்பீடு ரூ.1,977 கோடியாக உயர்த்தப்பட்டது. அதில் 90 விழுக்காட்டைத் தருவதற்கான ஒப்பந்தத்தில் ஜைக்கா நிறுவனமும் கையெ ழுத்திட்டு விட்டது. ஆனால், உயர்த்திய தொகைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை. 

திட்ட மதிப்பீடு உயர்ந்ததால் ஒன்றிய அரசு, தனது நிதியில் இருந்து கூடுதலாக ரூ.70 கோடி முதல்ரூ.80 கோடி தரவேண்டும். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் தந்தால் மட்டுமே அடுத்ததாக ஒப்பந்தப்புள்ளி கோர முடியும். ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்காத தால் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. -இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment