சென்னை, அக்.8 ஒன்றிய அரசால் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டால் தி.மு.க.வின் போர்க்குணம் வெளிவரும் என்று சென் னையில் நடந்த நூல் வெளி யீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களின் மூலம் கலைஞரின் வாழ்வும், நினைவும் இளைய தலை முறையினரின் நெஞ்சில் நிலைக்கொள்ளும் வகையில் தி.மு.க. மாணவர் அணி செய லாளர் சி.வி.எம்.பி.எழிலர சன் எம்.எல்.ஏ. "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்...'' என்ற நூலை தொகுத்துள்ளார். முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துரை கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று (7.10.2022) நடை பெற்றது. இந்த நூலை சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் கோபால், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. வரவேற்புரை யாற்றினார். இதில் அமைச் சர்கள், சட்டமன்ற, நாடா ளுமன்ற உறுப்பினர்கள் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராள மானோர் கலந்து கொண் டனர்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
பெரியார், அண்ணா, கலைஞர் மாடல்களின் கல வையாக தற்போது தலைவர் (மு.க.ஸ்டாலின்) திராவிட மாடல் ஆட்சியை கொடுத்து வருகிறார். அதற்கு எதிர்க் கட்சியை சேர்ந்த பா.ஜ.க. வினரே, கலைஞரை விடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தா னவர் என்று கூறி ஒப்புதல் கொடுத்துவிட்டார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. அடுத்த முறையும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப்போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது. மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதற்கு அத்தனை பேரும் உதவ வேண்டும்.
போர்க்குணம் வெளிவரும்
'திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்..' என்ற இந்த நூலில் கலைஞரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்வி, பதில்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதில், 'தி.மு.க.வின் அடை யாளமான போர்க்குண எதிர் அரசியலை இப்போது பார்க்க முடியவில்லையே? இது தலைமுறை மாற்றத்தின் விளைவா அல்லது கால முறை ஓட்டத்தின் சிதைவா?' என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'தி.மு.க.வின் போர்க்குணம் குறைந்துவிடவில்லை. அது என்றைக்கும் குறையாது. இன்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பாதகமான நட வடிக்கை எடுக்கப்பட்டால், தி.மு.க.வின் போர்க் குணத்தை பார்க்கவே செய் வீர்கள்' என்று கலைஞர் பதில் அளித்து இருக்கிறார். இந்த நேரத்தில் இந்த கேள்வி, பதில் மிக முக்கிய மானதாக பார்க்க முடிகிறது. ஒன்றிய அரசால் பழி வாங்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது தமிழ்நாட்டின் மாநில நிதி, கிடைக்கக்கூடிய உரிமைகள் பறிக்கப்பட் டாலோ, கிடைக்கவிடாமல் செய்தாலோ தி.மு.க.வின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிவரும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment