அரசின் துறைசார் பணியிட தேர்வை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

அரசின் துறைசார் பணியிட தேர்வை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதா?

ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

சென்னை,அக்.8- ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 20ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வை நடத்த உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் கூறப்ப ட்டுள்ளது. இதற்கு திமுக மகளிர் அணி தலைவரும், திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவருமாகிய கனிமொழி கடுங்கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அறிவிப்பை தம் முடைய டிவிட்டர் பதிவில் அப்படியே வெளியிட்டு, அதற்கான தம்முடைய கண்டனத்தை ஆங்கிலத்திலும், தமிழி லும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிஜிஎல் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத் துக்குரியது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத் தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை.   இவ்வாறு டிவிட்டர் பதிவில் மக் களவை உறுப் பினர் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment