செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

செய்திச் சுருக்கம்

எச்சரிக்கை

சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

விசாரணை

இராணுவத்தில் சிவிலியன்ஸ் பணிக்ளுக்கான தேர்வில் புளுடூத் பயன்படுத்தி தேர்வு எழுதிய அரியானா மாநி லத்தை சேர்ந்த 29 பேரிடம் காவல்துறை விசாரணை.

தேவையற்றது

திருக்குறளை மறுமொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து தேவையற்றது என மேனாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தனிப்படை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 2 கூடுதல்துணை கண்காணிப்பாளர்கள், 3 துணை கண் காணிப்பாளர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து சி.பி.சி. அய்.டி. டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

வருமானம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ஆம் ஆண்டுக் குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தர்மபுரியில் ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் தகவல்.

வலியுறுத்தல்

தொழில் கல்வியில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால்தான் நாடு வளர்ச்சி அடையும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கை யுடன் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா வெளி யிட்ட பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது.

விசா

நியூசிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு விரைவாக விசா வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வேண்டுகோள்.


No comments:

Post a Comment