பெங்களூர், அக்.8 பொதுக் கிணறு உனது முதலமைச்சர் பதவிக்கு தடையாக உள்ளது. அதை மூடினால் முதலமைச்சர் பதவிகிடைக்கும் என்று ஜோதி டர் கூறியதை அடுத்து கிணற்றை மண் நிறைத்து மூடியுள்ளார். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.
கருநாடக மாநிலம் உப்பள்ளி-தார்வார் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஜக கட்சியைச்சேர்ந்த அரவிந்த் பெல்லத். மாநிலத்தில் கருநாடக மாநில முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவை மாற்றிவிட்டு புதியவரை முதலமைச்சராக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருந்தது.
அப்போது அரவிந்த் பெல்லத் துக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதர வாளர்கள் அவரிடம் சலுகைகள் பெற வதந்தியைப் பரப்பி விட்டனர் இதை நம்பி அவரும் முதலமைச்சர் பதவிக்காக டில் லிக்கு பலமுறை சென்று கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். சில டில்லி பாஜக பிர முகர்களுக்கு கோடிக்கணக்கில் பணமும் தந்ததாக செய்திகள் வந்தது.
ஆனால் அவருக்கு முதல மைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்த நிலையில், அரவிந்த் பெல்லத் வீட்டின் அருகே இருந்த பொதுக் கிணறு மூடப்பட்டு இருந்தது இதையடுத்து, கிணற்றை காணவில்லை எனக்கூறி, காங் கிரஸ் கட்சியை சேர்ந்த நாகராஜ் கவுரி, தார்வார் புறநகர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறை வழக்கை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் வீட்டின் அருகேஉள்ள பொதுக்கிணறு உங்களுக்கு வரும் நல்லவைகளை விழுங்கி விடுகிறது, ஆகவே அந்தக்கிணற்றை மூடிவிட்டால் விரைவில் உங்களுக்கு முதலமைச் சர் பதவி வந்து சேரும் என்று ஜோதிடன் கூறியதை நம்பிய சட்டமன்ற உறுப்பினர் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள கிணற்றை மண்போட்டு மூடி தரையாக்கிவிட்டார்.
இந்த மூடநம்பிக்கையால் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர்க்கிணற்றையே மூடிய சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக லோக் அயுக்தாவில் புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் பதவிகிடைக்க வேண்டி ஜோதிடர் கூறியதற்காக பொதுக்கிணற்றையே பாஜக சட்டமன்ற உறுப்பினர் மண் போட்டு மூடிய நிகழ்வு கருநா டகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
No comments:
Post a Comment