மதுரை,அக்.8- மதுரை காவலர் இடமாறு தலுக்கு எதிரான வழக்கில் 'கர்மா' அடிப் படையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சிறீமுருகன் என்பவர், மதுரை காவல்துறையில் முதல் நிலை காவலராக பணிபுரிகிறார். பணியின்போது முறையான அனுமதியின்றி விடுப்பு எடுத்தல், பணியில் கவனக்குறைவாக செயல்படுதல் போன்ற காரணங்களுக்காக இவர் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக சிறீ முருகன், மதுரை மாவட்டத்திலிருந்து தூத் துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, கர்மாவின் கொள்கைகளை செயல் படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த நீதிமன்றம் நிவாரணம் வழங்க முனைகிறது. அதாவது, கர்மாவின் கொள்கைகளில் ‘சஞ்சித கர்மா’ (முழு கர்மா), ‘பிராப்த கர்மா’ (கர்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டுள்ளது. ‘பிராப்த கர்மா’க்கு மட்டுமே தண்டனை விதிக்கப் படுகிறது.
அதன்படி மனுதாரர் பல தண்டனைகளை அனுபவித்து விட்டார். இதனால் தூத்துக்குடி இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை மதுரை மாவட்டத்தில் போக்கு வரத்து காவல் பிரிவுக்கு மாற்ற வேண்டும். போக்குவரத்து காவல் பிரிவில் மனுதாரர் குற்றச்சாட்டு இல்லாமல் பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய் யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், மகேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் வீரா கதிரவன் ஆஜராகி, காவலர் இடமாற்றம் என்பது துறை ரீதியான நடவடிக்கை. அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடி யாது. இந்த பதவியில் இந்த இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடி யாது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து, காவலர் இடமாறுதல் தொடர் பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெண் எழுத்தாளருக்கு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம், அக்.8 இலக்கியத் திற்கான நோபல் பரிசு பிரான்ஸ நாட்டை சேர்ந்த பெண் எழுத் தாளருக்கு அறிவிக் கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற் பியல், வேதியியல், இலக்கியம், பொரு ளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் உல களாவிய பங்களிப்பு செய்யும் சாதனை யாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக் கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2022-ஆம் ஆண்டு இலக்கி யத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இலக்கியத் திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எல் அகுபேஷன் (L'occupation) என்ற புத்தகத்தை எழுதிய தற்காக எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக் கப்பட்டுள்ளது. முன்னதாக, 2022 ஆம் ஆண் டுக்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப் பிடத்தக்கது.
ரேசன் கடைகளில் விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் எச்சரிக்கை
சென்னை, அக்.8 ரேசன் கடைகளில் மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சுதான்சு பாண்டே கூறியுள்ளார். தமிழ் நாட்டிற்கு வந்துள்ள ஒன்றிய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் சுதான்சு பாண்டே, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள் மற்றும் மக்கள் அங்காடிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாரதி நகர் அருகே உள்ள மக்கள் அங்காடிக்குச் சென்று, அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேசன் கடைகளில் மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், விருப்பமில்லாத பொருள் களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினார் தக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments:
Post a Comment