வரும் டிசம்பர் 2 அன்று சென்னையில் தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

வரும் டிசம்பர் 2 அன்று சென்னையில் தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

டிசம்பர் 17 அன்று  திருப்பத்தூரில் முப்பெரும் விழா

திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்கள்

சென்னை, அக்.8 தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளை அவரது பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று சென் னையிலும், டிசம்பர் 17 அன்று திருப்பத் தூரில் முப்பெரும் விழாவாக நடத்துவது   என்று தீர்மானிக்கப்பட்டது.

சென்னை பெரியார் திடலில் 8.10.2022 அன்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் தலைமையில் நடைபெற்ற கழகத் தோழர்களின் சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

1. தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

10 வயதில் இயக்கத்தில் ஈடுபட்டு, 90 ஆம் வயதை நெருங்கவிருக்கும் இக் காலக் கட்டம் வரை அயராது உழைத்து, அரிய சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருப்பவரும், 88 ஆண்டுகள் ‘விடுதலை’ நாளேட்டிற்கு 60 ஆண்டுகள் ஆசிரியர் என்ற உலக சாதனைக்கு உரியவருமான திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை - அவர்தம் பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 ஆம் நாளன்று சென்னையில் வெகுசிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

2. திருப்பத்தூரில் முப்பெரும் விழா!

சுயமரியாதைச் சுடரொளி திருப் பத்தூர் மானமிகு ஏ.டி.கோபால் அவர் களின் நூற்றாண்டு விழா - ‘விடுதலை’ சந்தா இரண்டாவது தவணை வழங்கும் விழா - கழகத் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்களை வரும் டிசம்பர் 17 (சனிக்கிழமை) அன்று முழு நாள் விழாவாக, அம்மாவட்டக் கழகத் தலைவர், பொறுப்பாளர்கள் விருப்பப் படி திருப்பத்தூரில் சீரும் சிறப்புமாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.


No comments:

Post a Comment