சென்னை, அக். 9- உச்ச நீதிமன்ற அறிவுரை, வழி காட்டுதலின்படி அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த கருத்துகளை அனுப்பலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி, அரசு விளம்பரங்களை முறைப் படுத்தி செயல்படுத்த மூவர் குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் அலுவலகத்தில் 6.10.2022 அன்று நடைபெற்றது.
மூவர் குழு தலைவரான ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி கே.நந்தகிஷோர், உறுப்பினர் செயலர் அய்ஏஎஸ் அதிகாரி வீ.ப.ஜெயசீலன், பொது மேலாளர் சிவா மெய்யப்பன், மூத்த செய்தியாளர் டி.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு விளம்பரங்களை முறைப் படுத்துவது மற்றும் அரசின் விளம்பர கொள்கையை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்கான கருத்துகளை tnadvtcommittee@gmail.com என்ற இமெயில் முக வரிக்கு அனுப்பலாம் என்று தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment