பெங்களூரு, அக். 9- காங்கிரஸ் மேனாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைப்பயணத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளாவைத் தொடர்ந்து கரு நாடகாவில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தசரா திருவிழா காரணமாக 2 நாட்கள் நடைப் பயணத்துக்கு ஓய்வளித்த ராகுல் காந்தி, 7.10.2022 அன்று மண்டியாவில் உள்ள பாண்டவ புராவில் நடைப்பயணத்தை மீண்டும் தொடங்கினார். காங்கிரஸின் இடைக்கால தலை வரும், அவரது தாயாருமான சோனியா காந்தி, மேனாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் நடைப்பயணதில் பங்கேற்றனர்.
இதனிடையே, நடைப்பயணத்தில், கருநாடகாவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கே ஷின் தாயார் மற்றும் சகோதரியுடன் இணைந்து அவர் களுடன் நடந்து சென்றார் ராகுல் காந்தி.
மேலும், "கவுரி சத்தியத்திற்காக நின்றாள், கவுரி தைரி யத்திற்காக நின்றாள், கவுரி சுதந்திரத்திற்காக நின்றாள். நான் கவுரி லங்கேசுக்காக நிற்கிறேன் மற்றும் அவரைப் போன்ற எண்ணற்றோர், இந்தியாவின் உண்மையான உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இந்த நடைப் பயணம் அவர்களின் குரல். அதை ஒருபோதும் அமைதி யாக்க முடியாது" என்று ராகுல் காந்தி பதி விட்டுள்ளார்.

No comments:
Post a Comment