வேலூர், அக். 9- ராணிப்பேட்டை நெமிலியில் பூஜைப் பொருள்கள் கடையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப் பட்டார். நெமிலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலை யடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவின் பேரில் நெமிலி காவல்துறை மற்றும் தனிப் படையினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பள்ளூர் கிராமத்தில் வாராகி அம்மன் கோவில் அருகே மஞ்சள், குங்குமம், தேங்காய் உள்ளிட்ட பூசை பொருள்களை விற்பனை செய்யும் தணிகைவேல் (வயது 59)என்பவரது கடையில் சோதனை செய்ததில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டது. இதனையடுத்து தணிகைவேலை கைது செய்து தீவிர விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.
சிவனுக்கு உகந்தது கஞ்சா என்று சாமியார்கள் சொல்லுவார்கள். அகோரிகள் முதல்கொண்டு வடக்கே சாம்பலைப்பூசிக்கொண்டு திரியும் சாமியார்கள் எல்லாம் நாளெல்லாம் கஞ்சா புகைத்துக்கொண்டே பக்தியில் மூழ்கி இருப்பார்கள். கடவுளுக்கு உகந்த பூசைப் பொருள் என்று நினைத்து கஞ்சாவை விற்றிருப்பார்.
No comments:
Post a Comment