தனியார் அருங்காட்சியகத்தில் 2 சோழர் கால சிலைகள் பறிமுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

தனியார் அருங்காட்சியகத்தில் 2 சோழர் கால சிலைகள் பறிமுதல்

சென்னை, அக். 9- கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் முறை யான ஆவணங்கள் இல்லாமல், பழங்கால சிலைகள் இருப்பதாக தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், காவல்துறை ஆணை யர் தினகரன் மேற்பார்வையில், காவல்துறை கண்காணிப் பாளர்கள் முத்துராஜா, மோகன் தலைமையிலான தனிப் படை காவல்துறையினர், அந்த அருங்காட்சியகத்தில் 6.10.2022 அன்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், அங்கிருந்த பழங்கால வீணாதாரர் மற்றும் ரிஷபதாரர் ஆகிய 2 வெண்கலச் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டன. சோழர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, இரு சிலைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் துல்லியமான மதிப்பு குறித்து நிபுணர்களின் கருத்துகளைப் காவல்துறையினர் கேட்டுள்ளனர். மேலும், இவை எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டவை, தொடர்புடையவர்கள் யார் எனவும் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment