சென்னை, அக். 9- தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட அவசர தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர்
ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், இணைய வழி சூதாட்டம் தொடர்பாக விளம் பரம் செய்யவும், அந்த நிறுவனங் களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த் தனை செய்யவும் தடை விதிக்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இணைய வழி சூதாட்டத்தால் கடன் சுமைக்கு உள்ளாகி, இளைஞர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வந் தது. காவல் துறையைச் சேர்ந்த வர் கூட தற்கொலை செய்துகொண்டார். எனவே, தமிழ்நாட்டில் இணைய வழி சூதாட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட் டன.
இந்நிலையில், இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணைய வழி விளையாட்டுகளை முறைப் படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை யைச் சமர்ப்பித்தது.
இதற்கிடையில், அரசு சார்பில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப் பில், இணைய வழி விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதாக 70 விழுக்காடு ஆசிரியர்களும், கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுவதாக 67 விழுக் காட்டினர், மாணவர்களின் அறி வுத் திறன், சிந்தனைத் திறன், எழுத்துத் திறன் குறைந்திருப்பதாக 74 விழுக்காட்டினர், மாணவர்க ளுக்கு தாழ்வு மனப்பான்மை அதி கரித்திருப்பதாக 76 விழுக்காட்டி னர், ஒழுக்கக்கேடாக நடந்துகொள் வதாக 72 விழுக்காடு ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இணைய வழி சூதாட்டத்துக்கு தடை விதிப் பது தொடர்பாக அரசு சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 735 பேரிடம் பெறப் பட்ட கருத்துகளில், 99 விழுக்காட் டினர், அதாவது 10 ஆயிரத்து 708 பேர் இணைய வழி சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த தரவுகளின் அடிப்படை யில், இணைய வழி சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதுபோன்ற இணைய வழி சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகள், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்குவதால், ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் சட்டங்களைக் கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, புதிய சட்டம் இயற்ற அரசு முடிவுசெய்தது.
அதன்படி, தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணைய வழி விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா-2022-அய் உருவாக்கியது. அதற்கு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப் புதல் அளிக்கப்பட்டது. இந்நிலை யில், இந்த அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த அவசரச் சட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் முழுமையான சட்ட வடிவம் பெற உள்ளது. முன்னதாக, இந்த அவ சரச் சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த சட்டப்படி, தமிழ்நாட்டில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொரு ளையோ வைத்து, இணைய வழி மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இணைய வழி விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், இனி அந்த சேவையை வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. எந்த நிறு வனமும், எந்த வகையிலும் இணைய வழி சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்ய தடைவிதிக்கப்படுகிறது.
இதுபோன்ற விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் விளையாடு வோர் இடையே பணப் பரிவர்த் தனை மேற்கொள்ள வங்கிகள், பேமென்ட் வங்கிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
பணத்தை வைத்து இணைய வழி சூதாட்டம், இணைய வழி விளையாட்டு ஆகியவற்றை விளை யாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அப ராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
அதேபோல, இணைய வழி சூதாட்டம் தொடர்பாக விளம் பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண் டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இதுபோன்ற சூதாட்டங்களில் ஏற்கெனவே தண்டனை பெற்ற வர்கள், அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டுக்குக் குறையாமல், 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இணைய வழி விளையாட்டு களை ஒழுங்குபடுத்த தனி ஆணை யத்தை அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தின் தலைவராக, அரசு தலைமைச் செயலருக்கு குறையாத பதவி வகித்து, ஓய்வுபெற்ற அதி காரியை நியமிக்க வேண்டும். மேலும், காவல் துறை அய்.ஜி., தகவல் தொழில்நுட்ப வல்லுநர், மனநல ஆலோசகர், இணைய வழி விளையாட்டில் அனுபவம் வாய்ந்த ஒருவர் ஆகியோரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment