புழல், அக். 23- புழல் காவாங்கரை மாரியம்மாள் நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் (வயது 39). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், இதே பகுதியில் 4.5 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி புழல் 23ஆவது வட்ட பாஜக தலைவர் வெங்கடேசன், வட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் அமர்நாத் மற்றும் நிலத்தின் மேற்பார்வையாளர் விக்னேஷ் ஆகியோரிடம் சென்று பணம், வீட்டுமனை கேட்டுள்ளனர்.
அவர்கள் தர மறுத்ததால், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளனர்.
மேலும், வீட்டுமனை போடுவதற்கு இடையூறு ஏற்படுத் தும் வகையில், கம்பம் வைத்து பாஜக கொடி ஏற்றியுள்ளனர். இதுபற்றி அமர்நாத் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவுப் செய்து, பாஜக நிர்வாகிகள் வெங்கடேசன், ஏழுமலை ஆகியோரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment